×

நரசிங்கபுரத்தில் வளர் இளம்பெண்களின் கல்வி நிலை குறித்த கருத்தரங்கம்

ஆத்தூர், அக்.31:  நரசிங்கபுரத்தில், ஆத்தூர் ஒன்றிய  அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் கல்வி நிலை குறித்த  கருத்தரங்கம் நடைபெற்றது. நரசிங்கபுரம் விநாயகபுரத்தில், ஆத்தூர் ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் கல்விநிலை குறித்த கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் மக்கள் அமைப்பு மோகன்குமார் தலைமை வகித்தார். பவர் டிரஸ்ட் இயக்குனர் ஜெகதாம்மாள் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின் கருத்தரங்கின் நோக்கவுரையாற்றினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தை தொழிலாளர்களையும் மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வளர் இளம்பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு தரமான ஊட்டச்சத்து வழங்க வேண்டும். பராம்பரிய உணவு வகைகள் பள்ளிகள், அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்.

பெண் கருக்கொலைகளுக்கு துணை போகும் மருத்துவமனைகளை கண்டறிந்து, ஸ்கேன் மையங்களை தடை செய்ய வேண்டும். சிறுவயது திருமணங்களை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விஜயா, அன்பழகன், கார்த்திகா, நிர்மலா, ராமு, டாக்டர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலைமணி நன்றி கூறினார்.

Tags : Narasingapuram ,
× RELATED 27 முறை அதிகாரிகள் நிராகரிப்பு மாலையாக அணிந்து மீண்டும் மனு அளித்த வாலிபர்