×

கடையம் அருகே சாலையோரத்தில் மண் அரிப்பு

கடையம், அக். 25:  கடையம் அருகே மேட்டூரில் இருந்து ஆசிர்வாதபுரம் செல்லும் சாலையையும், மேட்டூரில் இருந்து கடவாகாடு செல்லும் சாலையையும் இணைக்கும் சாலை ரூ.5.38 லட்சம் செலவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை அமைப்பதற்கான சரள் மண் இதே சாலையின் இருபுறமும் சுமார் 15 அடி ஆழத்திற்கு தோண்டி எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் ராட்சத பள்ளங்கள் கிணறுபோல உள்ளன.

ஆசீர்வாதபுரம், கானாவூர், மாதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ரயில் நிலையம் செல்வதற்கும், ஆவுடையானூர், பாவூர்சத்திரம், வெய்க்காலிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ராமநதி அணை விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்த மழையில் மண்அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் மேலும் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் சாலையின் இருபுறமும் உள்ள பள்ளங்களை மூடவும், தேமடைந்த சாலையை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mud erosion ,roadside ,garage ,
× RELATED ‘அமீகோ கேரேஜ்’ வி ம ர் ச ன ம்