×

ஓமலூரில் குப்பையோடு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ஓமலூர், அக்.24:  ஓமலூர் மற்றும் மாவட்டம் முழுக்க மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் அலட்சியம் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை சாதாரண குப்பைகளுடன் சேர்த்து கொட்டி வருகின்றனர். இதனால், நீர்நிலைகள், மலைகள், சுற்றுப்புறங்கள் சுகாதார சீர்கேடுகளால் பல உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2008-ம் ஆண்டு மருத்துவ கழிவுகளை கையாளுவதற்காக கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தொற்றுக்கிருமிகள் பரவி உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதில் ஓமலூர் பகுதியில் உள்ள மலை மற்றும் சாலையோர பகுதியில் தூக்கி வீசப்படும் மருத்துவக் கழிவுகள் அதிகம் கொட்டி கிடக்கிறது. அதில் ஊசியில் மற்றும் மாத்திரைகள் அதிகம் காணப்படுகிறது.

இதகை அகற்ற தமிழக அரசு, மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை கையாளுவதில் அக்கறை காட்டவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். அதனால், பொது இடங்களிலும், ஏரி, குளம், ஆறுகளிலும் மருத்துவ கழிவுகள் சர்வசாதாரணமாக கொட்டப்படுகிறது.இதன் விளைவுகளால் நீர்நிலைகளில் கலந்தும், காற்றிலும் நச்சுக்கிருமிகள் பரவி மனிதர்கள் மற்றும் உயிரினங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.அதனால், அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கையாளுவதில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!