கெலமங்கலத்தில் நாளை தோல்நோய் சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி, அக்.23: கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு தோல்நோய் மற்றும் தொழு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாமில் தோல்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் தொழு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு அறுவை சிகிச்சை, சிறப்பு காலணிகள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ₹1500 மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, தொழு நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் மார்பளவு புகைப்படம்-5, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என முகாம் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>