×

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

இடைப்பாடி, அக்.23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 350 மூட்டை நிலக்கடலை ₹4 லட்சத்திற்கு ஏலம் போனது. இடைப்பாடி அருகே திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் செவ்வாய் மற்றும் ஞாயிறுதோறும் நிலக்கடலை ஏலம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த ஏலத்திற்கு இடைப்பாடி, பூலாம்பட்டி, பக்கநாடு, ஆடையூர், கோனேரிப்பட்டி, பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 350 நிலக்கடலை மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். இதில் 60 கிலோ மூட்டை கொடிக்காய் ரகம் ₹850 முதல் ₹1250 வரையிலும், பட்டாணி ரகம்  ₹1250 முதல் ₹1750 வரையிலும் ஏலம் போனது. ஆகமொத்தம் 350 மூட்டை நிலக்கடலை ₹4 லட்சத்திற்கு ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலக்கடலை வரத்து குறைந்தது.

Tags : Auction ,Tiruchengode Co-operative Society ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்