×

மாவட்டத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

ஆத்தூர், அக்.16: சேலம மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் 88வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்லேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அமுதா தலைமையில் டாக்டர் அப்துல்கலாம்  திருவுருவ படத்திற்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாப்பநாயக்கன்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் சங்கர் தலைமையில் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆத்தூர் அருகே மல்லியகரை ராசி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில், “கீரின் கலாம்” என்ற தலைப்பில் மரம் வளர்ப்பினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகக்குழு செயலாளர் மாசிலாமணி துவக்கி வைத்தார். தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் மணி, கல்விக்குழு தலைவர் கனகராஜன், பள்ளியின் முதல்வர் சுகிதாதினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளம்பிள்ளை: இளம்பிள்ளை பஸ் நிலையம் அருகில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளைஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பென்சில், உபகரணங்கள் வழங்கினார். கெங்கவல்லி: கெங்கவல்லி அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு தலைமையாசிரியர் செல்வம், பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றி  தலைமையாசிரியர் மாணவர்களிடம் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு மீனாம்பிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Abdulkalam ,birthday party ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...