×

ஓமலூர் பகுதியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம்

ஓமலூர், அக்.16: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார பகுதியில்அவசரகால மீட்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார பகுதிகளில் அவசரகால மீட்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த ஒத்திகையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படும்போது பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது, எவ்வாறு அதிலிருந்து தப்பிப்பது குறித்த பயிற்சிகளை ஓமலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீரர்கள் அளித்தனர்.தொடர்ந்து தீவிபத்து ஏற்படும்போது தீயை அனைப்பது, தீயில் சிக்கியவர்களை காப்பது, மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து தற்போது மழை பெய்து வருவதால், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பும் வாய்ப்புகள் உள்ளன. குளங்கள், குட்டைகளில் ஆழம் இருபது தெரியாமல் தண்ணீரில் இறக்கி தத்தளிப்பவர்களை நீச்சல் தெரியாதவர்களும் கயிறுகள் கொண்டும் அக்கம்பக்கதினரை அழைத்தும் மீட்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை எவ்வாறு பாதுகாப்புடன் காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீரர்கள் செயல் விளக்கம் செய்தும் காண்பித்தனர். இதனையடுத்து பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனர். ஓமலூர் வட்டாட்சியர் குமரன், காடையாம்பட்டி வட்டாட்சியர் மகேஸ்வரி, அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய செஞ்சுலுவை சங்க தொண்டர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும்,கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர். மேலும், இந்த தேசிய பேரிடர் குறைப்பு தின பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

Tags : Disaster Rescue Awareness Camp ,Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!