×

தளி அருகே இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, அக்.16: தளி அருகே மல்லிகுட்டை, குருசாத்தப்பன்தொட்டி கிராம சாலையை தனியார் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளி அருகே மல்லிகுட்டை, குருசாத்தப்பன்தொட்டி உட்பட 12 கிராமங்களுக்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து, சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோவிந்தன், குமார், மாதேவய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர்கள் லகுமைய்யா, சுந்தரவல்லி, நஞ்சப்பா, பகுதி செயலாளர் பூதட்டியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : IQ ,Thali Demonstration ,
× RELATED இ.கம்யூ கட்சி அரசியல் விளக்க பொதுக்கூட்டம்