×

போச்சம்பள்ளியில் வரும் 6ம் தேதி காங்., பாதயாத்திரை

போச்சம்பள்ளி, அக்.4: போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு வரும் 6ம் தேதி கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் தலைமையில் பாதயாத்திரை நடக்கிறது. காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த பாதயாத்திரையானது காலை 7.25 மணிக்கு போச்சம்பள்ளி, 830 மணிக்கு கரடியூர், 9 மணிக்கு வீரமலை கூட்ரோடு, 10 மணிக்கு செல்லம்பட்டி, 10.30 மணிக்கு நாகரசம்பட்டி கூட்ரோடு, 11 மணிக்கு மருதேரி கூட்ரோடு, 11.30 மணிக்கு பேருஅள்ளி வழியாக மதியம் 12 மணிக்கு காவக்கரை முருகன் கோயிலை அடைகிறது. பின்னர், அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு நெடுங்கல், 3 மணிக்கு பெண்ணேஸ்வரமடம், 3.30 மணிக்கு ஏழைமலையான்கொட்டாய் மாலை 4 மணிக்கு சவுளூர் வழியாக 5 ணிக்கு காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தை அடைகிறது. இந்த பாதயாத்திரையில் அனைத்திந்திய, மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டரா, நகர நிர்வாகிகள்  மற்றும் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Pochampally ,
× RELATED தீபாவளியை முன்னிட்டு நவ.6 முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை