காஞ்சிபுரம், அக்.4: தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் நடந்த நவராத்திரி விழாவில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜராஜன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ரம்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.நவராத்திரி காலத்தில் மாறுபாடான தட்ப வெப்பநிலை, கடுமையான நோய்களை ஏற்படுத்துவதாகவும், கிரக நிலை சரியில்லாதவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதால், அந்த கொடுமையில் இருந்து விடுபட அரசர்கள் பெரிய வேள்வி நடத்தி துர்கை, லட்சுமி, சரஸ்வதி பூஜை செய்து, நவராத்திரி விழா கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதன்படி, உலக நன்மைக்காக விஷ்ணுவின் 10 அவதாரங்கள், விலங்குகள், பறவைகள், இயற்கைக் காட்சிகளுடன் 5 படிகள் அமைத்து பூஜைகள் நடந்தன.
