×

இடைப்பாடி வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

இடைப்பாடி, செப்.26: இடைப்பாடி அடுத்த கவுண்டம்பட்டியில் , வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்aக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கவுண்டம்பட்டி கிழக்கு சிறு தொழில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்க் சங்க செயலாளர் ராஜி தலைமை வகித்தார். இடைப்பாடி, ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்க் சங்க செயலாளர் ரவி, மேற்கு சிறு தொழில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பூபதி, சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேட்டு, கவுண்டம்பட்டி சங்க தலைவர் தங்கராஜ், நடராஜன், மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இடைப்பாடியில் விசைத்தறி ஜவுளி தொழில் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டு 50 சதவீதமாக குறைந்துவிட்டது. மேலும், மாநில அரசு வீட்டுவரி, தொழில்வரி, குப்பை வரி, மின்இணைப்பிற்கான டெபாசிட், நூல்விலையேற்றம், சாயமருந்து விலையை உயர்த்தியதால் விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, கோரிக்கை மனுவை மேலாளரிடம் வழங்கினர்.

Tags : Textile Manufacturers Association Consultative Meeting ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை