×

வெண்ணெய்மலை ஆறுமுகம் நகரில் ஜல்லி கற்கள் கொட்டி ஒரு மாதம் ஆகியும் இன்னும் சாலைப்பணி துவங்காத அவலம்

கரூர், செப். 25: கரூர் வெண்ணெய்மலை ஆறுமுகம் நகரில் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் கொட்டிய நிலையில் உள்ளன. விரைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட வெண்ணெய்மலை ஆறுமுகம் நகர், சண்முகம் நகர் ஆகிய தெருக்களில் தார்ச்சாலை அமைக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையில் ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது. ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் விரைந்து தார்ச்சாலை அமைக்கப்படும் என இந்த பகுதியினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ஜல்லிக் கற்கள் கொட்டி ஒரு மாதம் கடந்தும் இதுநாள் வரை எந்தவித அடுத்த கட்ட பணியும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தெருச்சாலைகளை எளிதாக பயன்படுத்திட முடியாமல் பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஜல்லிக் கற்கள் நடந்து செல்வது, வாகனங்களில் செல்வதற்கும் பெரும் பிரச்னையாக மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜல்லிக் கற்கள் கொட்டிய நிலையில் உள்ள இந்த தெருக்களில் விரைந்து அடுத்தடுத்து பணிகள் மேற்கொண்டு தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

Tags : Arumugam ,Vennaimalai ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர் – போலீசார்...