×

வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் கதையான மணல் கொள்ளை

கெங்கவல்லி, செப்.19:   வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் மணல் கொள்ளை தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா வீரகனூர் சுற்றுவட்டாரத்தில், இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மற்றும் போலீசார் என விவசாயிகள் குற்றம் சாட்டு.
வீரகனூர், கவர்பனை, லத்துவாடி, திட்டச்சேரி ஆகிய ஊர்களில் உள்ள சுவேதா நதிக்கரையில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாக தொடர் கதையாக மணல் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க பலமுறை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருவாய் துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, வீரகனூர் சுற்றுவட்டாரம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கொள்ளை சம்பவத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில நாட்கள் முன்பு மாட்டு வண்டி உரிமையாளரை ஒருவரை, மணல் கொள்ளையர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மணல் கொள்ளையால் கனிம வளம் மற்றும் குடிநீர் பிரச்னை ஏற்படுவதாக  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : neighborhood ,Veerakanur ,
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு