×

வள்ளியூரில் இன்று தேவி முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா

நெல்லை, செப். 10:  வள்ளியூரில் தேவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தேவி முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா இன்று (10ம் தேதி) நடக்கிறது.  வள்ளியூரில் தேவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தேவி முப்பிடாதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன. இந்நிலையில்  ஆவணி கொடை விழா இன்று (10ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நேற்று (9ம் தேதி) இரவு 9.30 மணிக்கு சாஸ்தா பிறப்பு, 10மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. கொடை விழாவான இன்று (10ம்தேதி)  காலை 8மணிக்கு ஆலடி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பிறப்பு வைபவம் நடக்கிறது. மதியம் 1மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 1.30 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. மாலை 5மணிக்கு புதிய ேபருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. 6மணிக்கு சரவணப்பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நடக்கிறது. 6.30 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. இரவு 10.30மணிக்கு  கரகாட்டம், இரவு 11 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. அதிகாலை 4மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை (11ம்தேதி) காலை 9மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கேரளா ஸ்டார் சிங்கர்ஸின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை தேவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Devi Muppidathi Amman Temple Donation Ceremony ,Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!