×

கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய காப்பீட்டு திட்டம் நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி உயர்வு: வீடு மானியம் ரூ.4 லட்சமாக அதிகரிப்பு; அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்பு:* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டிய நிலுவை தள்ளுபடி மானியத்திற்கு கூடுதலாக ரூ.160.11 கோடி வழங்கப்படும்.* கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கிட, ஆண்டு ஒன்றிற்கு, கிராமப்புறத்தில் 500 வீடுகளும், நகர்ப்புறத்தில் 500 வீடுகளும் கட்டுவதற்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.21 கோடி நிதி வழங்கப்படும்.* ரூ.6 கோடி திட்ட மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.* தமிழ்நாட்டின் கைத்தறி இரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில் ரூ.5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும். * தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையின் உற்பத்தி மற்றும் வியாபார திறனை மேம்படுத்த ரூ.4 கோடி மதிப்பில் தொடர் சலவை இயந்திரம் நிறுவப்படும்.* தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 2015ம் ஆண்டுக்கு பின்னர் அடிப்படை கூலி உயர்வு வழங்கப்படாததை கருத்தில் கொண்டும், நெசவாளர்களின் வருவாயை அதிகரித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டும் கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் 10 சதவீதம் உயர்வும், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வும் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவர்.* வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பெடல்தறி சேலை இரங்களுக்கு, தற்போது வழங்கப்படும் நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி, ஒரு உருப்படிக்கு ரூ.20.50லிருந்து ரூ.26.67 ஆக உயர்த்தியும், வேட்டி ரகங்களுக்கு ஒரு உருப்படிக்கு ரூ.10.30லிருந்து ரூ.12.36 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.3.67 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.* இலவச சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் பெடல்தறி கேஸ்மெண்ட் துணி ரகங்ககுளுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ஒரு மீட்டருக்கு ரூ.4.32லிருந்து ரூ.4.89 ஆக உயர்த்தியும், கைத்தறி டிரில் துணி ரகங்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ.3.81லிருந்து ரூ.4.69 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.75 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.* விலைவாசியினை கருத்தில் கொண்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1033 நிரந்தர பணியாளர்களின் ஊதிய விகிதத்தினை சீரமைக்க ஊதிய நிர்ணயக்குழு அமைத்து சம்பளம் உயர்வு வழங்கப்படும்.* நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் 406 தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர்.* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி இரகங்களில் கண்கவர் வடிவமைப்புகளை உருவாக்கி நெசவு செய்ய பயன்படும் மின்னணு ஜக்கார்டு இயந்திரங்கள் பராமரிப்பு சேவை மையம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்.* மாநில அளவிலான கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். முதல், 2ம், 3ம் பரிசாக முறையே ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 வழங்கப்பட்டு வருவதை முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் ஆக பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.15.50 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.* தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விற்பனை நிலைய விற்பனையாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதற்கு ரூ.35 லட்சம் செலவில் விற்பனை திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.* தமிழகத்தில் இயங்கும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதம் மாற்றி மாற்றியமைத்து வழங்கப்படும்.* கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமல்படுத்த ஆலோசனை குழு அமைத்து ஊதிய உயர்வு வழங்கப்படும்.* கடந்த ஆண்டுகளில் நெசவாளர்களின் நலனை பாதுகாத்திட நல்வாழ்வு காப்பீட்டு திட்டத்தின் கீழ் புறநோயாளி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் ஒன்றிய அரசினால் கைவிடப்பட்டுள்ளதால், நெசவாளர்களில் உடல்சார்ந்த புறநோயாளி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஆரோக்கிய நெசவாளர் நலவாழ்வு மற்றும் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்கள் பட்டியிலிடப்பட்ட மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெற்று கொள்ளலாம்.* கைத்தறி நெசவாளர்களுக்கு மின் வணிகத்திற்கான கணினி பயிற்சி வழங்கப்படும்* கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும்.* கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படும்இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.* மயிலாப்பூரில் புதிய விற்பனை நிலையம்சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்படும்….

The post கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய காப்பீட்டு திட்டம் நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி உயர்வு: வீடு மானியம் ரூ.4 லட்சமாக அதிகரிப்பு; அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,R. Gandhi ,Chennai ,R.Gandhi ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி