×

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.403.16 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

சென்னை:பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் ஆர்.காந்தி கூறியிருப்பதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின்படி இரு மாதங்களுக்கு 200 அலகுகள் வரை அரசு வழங்கி வருகிறது. 2020-21ம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் ரூ.7.26 கோடியினை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்தொகை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் படி இரு மாதங்களுக்கு 750 அலகுகள் வரை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தால் 1,42,227 விசைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். 2020-21ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் ரூ.383.96 கோடியினை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்தொகை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-22ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்கென திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.403.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.403.16 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,R.Gandhi ,Parliament ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி