தமாகா செயற்குழு கூட்டம்

ஓமலூர், ஜூன் 25: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஓமலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சுசிந்திரகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், நிர்வாகிகள் பேசுகையில், ‘அதிமுக தலைமை இல்லாத கட்சியாக உள்ளது. எனவே, மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து தீர்க்க வேண்டும். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்,’ என்றனர். இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், அதிமுக கூட்டணியில் நீடித்தால், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோருதல், உள்ளாட்சியில் தமாகாவிற்கு 10 சதவீத இடங்களை வழங்க கோருவது, கர்நாடகா, கேரளா அரசுகள் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வட்டார தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், தேவராஜன், விசுவநாதன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், மாவட்ட தலைவர் சச்சு ஆகியோர் கலந்து கொண்டனர். ஓமலூர் நகர தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories:

More
>