×

ஓசூர் காமராஜர் காலனியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்

ஓசூர், ஜூன் 13: ஓசூர் காமராஜர் காலனியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் காமராஜர் காலனியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. ஓசூர் உழவர் சந்தை, தக்காளி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், தார்சாலை சிதிலமடைந்து தற்போது மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மழை பெய்யும் நாட்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

அதே போல், மண் சாலையில் பயணிக்கும் போது, தூசி பறந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை தார்சாலையாக மாற்றக்கோரி மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் மழை காலம் தொடங்குவதால், இந்த சாலையை தார்சாலையாக மாற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜர் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Housework ,Hosur Kamaraj ,
× RELATED ஓசூர் காமராஜ் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை