×

‘ஒட்டன்சத்திரம் அருகே மாட்டுத்தாவணி’

ஒட்டன்சத்திரம், ஜூன் 12:ஒட்டன்சத்திரம் அருகே ஜூன் 25ந் தேதி மாட்டுத்தாவணி என்ற கால்நடை கண்காட்சி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எஸ்.அத்திக்கோம்பையில் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஆண்டு தோறும் கால்நடைகள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும். அதேபோல் வரும் மாட்டுத்தாவணி 123ம் ஆண்டாகும். சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் மாடுகளும், விலை உயர்ந்த காங்கேயம் காளைகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், நாட்டு பசு மாடுகள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் மாடுகளும் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன. மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏற்றதாக இக்கண்காட்சி உள்ளது என்பதால் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் பங்கேற்று வருகின்றன. இதுகுறித்து பரம்பரை டிரஸ்ட்டிகள் தங்கமுத்துப்பிள்ளை மற்றும் ரவீந்திரன்பிள்ளை கூறியதாவது, திருவிழா தொடங்கும் நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே மாடுகள் வரத் தொடங்கிவிடும். விலை உயர்ந்த ரேஸ் குதிரைகள், பெரிய குதிரைகள், சிறிய குதிரைகள் கொண்டு வரவும் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Mattupattinai ,Ottnancherry ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே உடைய போகுது ஊருக்கான வழி சீரமைக்க கோரிக்கை