×

மதுரை- பெங்களூர் இடையே சோதனை ஓட்டம் திண்டுக்கல்லை 120 கிமீ வேகத்தில் கடந்து சென்ற வந்தே பாரத்

திண்டுக்கல், ஜூன் 18: தமிழகத்தில் தென்னக ரயில்வேயில் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் ஏற்கனவே சென்னை- கோவை, சென்னை-திருநெல்வேலி, கோவை- பெங்களூர் வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதனடிப்படையில் மதுரை- பெங்களூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற ஜூன் 20ம் தேதி சென்னையில் இருந்து துவங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மதுரையில் துவங்கி 120 கிலோ மீட்டர் வேகத்தில் திண்டுக்கல்லை கடந்து சென்றது. திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரை மதியம் 1.45 மணிக்கு சென்றடைந்தது. என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மதுரை- பெங்களூர் இடையே சோதனை ஓட்டம் திண்டுக்கல்லை 120 கிமீ வேகத்தில் கடந்து சென்ற வந்தே பாரத் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Dindigul ,Madurai ,Bangalore ,Chennai- ,Coimbatore ,Chennai-Tirunelveli ,Southern Railway ,Tamil Nadu ,Madurai- ,
× RELATED நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்