×

திண்டுக்கல் அருகே சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

கோபால்பட்டி, ஜூன் 19: திண்டுக்கல் அருகே ராசக்காபட்டி பிரிவு அருகே 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று சாலையோரத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்து வரும் மழையினால் பாதிப்படைந்த இந்த மரம் நேற்று காலை சாலையில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் திண்டுக்கல்- செந்துறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மரம் விழுந்த சமயம் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து ஏதும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

The post திண்டுக்கல் அருகே சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Gopalpatti ,Rasakkapatti ,
× RELATED கல்தார் தெளிப்பதால் குறையும் இனிப்பு...