×

கார் மோதி வாலிபர் படுகாயம்

நத்தம், ஜூன் 20: மதுரை மாவட்டம் கள்ளந்திரி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (23). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் நத்தம் அருகே கோமணம்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேம்பரளி சுங்கச்சாவடி அருகே வந்த போது மதுரையிலிருந்து சுபா என்பவர் ஓட்டி வந்த கார், பிரபுவின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரபுவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மோதி வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Natham ,Prabhu ,Kallandri Nayakkanpatti ,Madurai ,Komanambatti ,Vembarali ,Suba ,
× RELATED நத்தம் பகுதியில் நாவல் சீசன் துவங்கியது: ஒரு கூடை ரூ.600 வரை விலை போகிறது