×

ஒட்டன்சத்திரம் அருகே உடைய போகுது ஊருக்கான வழி சீரமைக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம், அக். 23:  ஒட்டன்சத்திரம் அருகே உடையும் நிலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே கொல்லபட்டி ஊராட்சிக்குட்பட்டது குமராயிபுதூர். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவ்வூரின் பிரதான சாலை வழியாக தான் இப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் ஒட்டன்சத்திரம் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஒரு சிறிய தரைப்பாலம் உள்ளது. சிமெண்ட் உருளைகளால் போடப்பட்டதால் தற்போது மழையால் இப்பாலம் இருபுறமும் அரிக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்தநேரத்திலும் பாலம் உடையும் நிலையில் உள்ளது. இப்பாலம் உடைந்தால் 5 கிமீ சுற்றிதான் இப்பகுதிக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து உடையும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : town ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு வாடகைதாரரை...