×

காவேரிப்பட்டணத்தில் வாக்காளர்களுக்கு செல்லகுமார் எம்பி நன்றி தெரிவித்தார்

காவேரிப்பட்டணம், ஜூன் 12: காவேரிப்பட்டணத்தில் உள்ள 15 வார்டுகளில் டாக்டர். செல்லகுமார் எம்பி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்ல குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, காவேரிப்பட்டணத்தில் உள்ள 15வது வார்டில் தொடங்கி 7, 8, 9 மற்றும் 1,2,3,4,5, 11, 12, 13 கொசமேடு, பனகல் தெரு, தேசிய செட்டி தெரு , சுபாஷ் சந்திரபோஸ், தெரு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., பேரூர் செயலாளர் பாபு தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுப்பிரமணி, காசிலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, பொதுக்குழு ராஜன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஜாவித்கான், காங்கிரஸ் நகர தலைவர் தக்காளி தவமணி, முத்து, வக்கீல் விஸ்வபாரதி, விஜய ஆனந்த், செந்தில்குமார், ஷாஜித், அரி நாராயணன், சாதிக், முஸ்தபா, சங்கர், பசுபதி, இளங்கோ, மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் சென்ற நன்றி தெரிவித்தனர்.

Tags : voters ,Kaveripattinam ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...