×

கெங்கவல்லியில் 5 நாட்கள் ஜமாபந்தி கூட்டம்

கெங்கவல்லி, ஜூன் 11:  கெங்கவல்லி தாலுக்காவில் ஆத்தூர் கோட்டாட்சியர் அபுல்காசிம் தலைமையில், ஜமாபந்தி நடக்கிறது. வரும் 11ம் தேதி உலிபுரம், நாகியம்ப்பட்டி, செந்தாரப்பட்டி தெற்கு, செந்தாரப்பட்டி வடக்கு, தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம், செங்காடு, சேரடிமூலை கள்ளிப்பட்டி பிள்ளையாமதி, வாழக்கோம்பை பகுதிகளிலும், 12ம் தேதி ஒதியத்தூர், 74.கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கடம்பூர், கூடமலை, 95.பேளூர், கொண்டையாம்பள்ளி, மண்மலை, முடக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நடக்கிறது.

13ம் தேதி கெங்கவல்லி வடக்கு, கெங்கவல்லி தெற்கு, ஆணையாம்பட்டி, தெடாவூர் வடக்கு, தெடாவூர் தெற்கு, நடுவலூர் வடக்கு, நடுவலூர் தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலும், 18ம் தேதி சொக்கனூர், வீரகனூர் தெற்கு, வீரகனூர் வடக்கு, திட்டச்சேரி, லத்துவாடி, வெள்ளையூர், இலுப்பநத்தம், நாட்டார் அக்ரஹாரம் பகுதிகளிலும், 19ம் தேதி வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, பகடாபாடி, கிழக்கு ராஜபாளையம், பின்னணூர், வேப்படிப்பாலக்காடு உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி கூட்டம் நடக்கிறது. கெங்கவல்லி தாலுக்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் பட்டா, சிட்டா மாற்றல், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை மனுக்களாக ஜமாபந்தியில் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெங்கவல்லி தாசில்தார் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Jamabhandi Meeting ,Kankavalli ,
× RELATED கெங்கவல்லி வனப்பகுதியில் கடும்...