×

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி நான்கில்(குரூப் 4) அடங்கிய பணிக்காலியிடங்களுக்கு, பயிற்சி வகுப்புகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ள இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

மேலும், வாரம் ஒருமுறை தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள், தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 17ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Group ,Job Offices ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.