×

பாமக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சேலம், ஜூன் 4: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில், பாமக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டவுன் ரயில்வே ஸ்டேசன் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, பாமக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நூரூதீன் தலைமை வகித்தார்.

இதில், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அருள், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், வடக்கு மாவட்ட ெசயலாளர் சாம்ராஜ், பசுமை தாயம் மாநில இணை பொதுச்செயலாளர் சத்ரியசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் மாணிக்கம், சின்னசாமி, அண்ணாமலை, செல்வம், விஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : opening ,Mamata ,
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்