×

தர்பூசணி ஏற்றி வந்த மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம், ஜூன் 4:   விழுப்புரம் புறவழிச்சாலையில் தர்பூசணி ஏற்றிவந்த மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்திலிருந்து திருச்சி நோக்கி மினிவேனில் தர்பூசணி ஏற்றிக்கொண்டு வந்தனர். விழுப்புரம் புறவழிச்சாலை எல்லீஸ்சத்திரம் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த வேன் அதிலிருந்த தர்பூசணி கீழே கொட்டி சேதமடைந்தது. அவ்வழியாக சென்ற எஸ்பி ஜெயக்குமார் உடனடியாக பொக்லைன் வாகனம் மூலம் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Minerva ,
× RELATED திருச்சுழி அருகே மினர்வா பப்ளிக்...