×

பெண்ணாடம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

விருத்தாசலம், ஜூன் 4: பெண்ணாடம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகேயுள்ள தி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஊமதுரை மனைவி ரஞ்சிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றோட்ட வசதிக்காக வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்தனர். அப்போது நள்ளிரவில் அப்பகுதியில் வந்த மர்மநபர் ஒருவர் ரஞ்சிதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த ரஞ்சிதா தாலிச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதில் தாலிச்சங்கிலியின் ஒருபகுதி மட்டும் மர்மநபரின் கையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து ரஞ்சிதா கத்தி கூச்சல் போட்டதால் அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த மர்மநபரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
இதுகுறித்து ரஞ்சிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணாடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thali Chain ,
× RELATED திருச்சியில் 14 வயது சிறுமியின் மர்ம...