×

தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பிடிஓ அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த தொழிலாளி

வேப்பனஹள்ளி, மே 30:  மேலூர்கொல்லகொட்டாய் பகுதியில் தெரு விளக்கு அமைத்துத் தரக்கோரி, வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பனஹள்ளி ஒன்றியம், நாடுவனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேலூர்கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன்(38), கூலி தொழிலாளி. மேலூர்கொல்லகொட்டாய் பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் வீடுகளுக்குள் அடிக்கடி பாம்புகள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளதால், தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பிடிஓ அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிவசங்கரன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அலறியடித்த அவர் பாம்பை அடித்துக் கொன்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த சிவசங்கரன், அதிகாரிகளிடம் பாம்பைக் காட்டி, தெருவிளக்கு அமைத்துத் தருமாறு முறையிட்டார். பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தெருவிளக்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர், அவர் திரும்பிச் சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : office ,PDO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...