×

தொற்றுநோய் பரவும் அபாயம் ஐஓபி சார்பில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி

பெரம்பலூர், மே 30: பெரம்பலூரில் ஐஓபி சார்பில் இலவசமாக நடத்தப்படும் எம் ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடு குறித்த பயிற்சியில் சேர விரும்புவோர் நாளை (31ம் தேதி) நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமைய இயக்குனர் அகல்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பெரம்பலூர் சங்குப்பேட்டை, ஷெரீப் காம்ப்ளக்சில் இயங்கி வரும் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதிமுதல் எம்ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடு குறித்தப் பயிற்சி வகுப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதிற்கு குறைந்தவராகவும், எழுதபடிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில்தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.பயிற்சிமைய வளாகத்திலேயே தொடர்ந்து 30 நாட்களுக்கு எம்ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடுகள் குறித்தப் பயிற்சிகள் இலவசமாக நடைபெறும். காலை 9.30 மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை, மதியஉணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டை, மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபிவங்கியின் மாடியிலுள்ள கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், குடும்பஅட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் சைஸ், ஒரு ஸ்டாம்ப் சைஸ்அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.மேலும் நாளை (31ம்தேதி) நடத்தப்படும் நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வில் பங்குபெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பயிற்சியில்சேர அனுமதி வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர்-621212 என்ற முகவரியிலோ அல்லது 04328- 277896 என்றத் தொலைப்பேசி எண்மூலமாகவோ தொடர்புகொள்ளலாம் என  பயிற்சிமைய இயக்குநர் அகல்யா தெரிவித்துள்ளார்.
நாளை நேர்காணலில் பங்கேற்க அழைப்பு

Tags : IOP ,
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...