பைக் மீது கார் மோதல்: தம்பி பலி-அண்ணன் படுகாயம்

திண்டிவனம், மே 23:   திண்டிவனம் அடுத்த நாரேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை மகன் வீரா(21). இவரது அண்ணன் முருகன்(23). இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் தங்கி கார்பென்டர் வேலை செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று வேளச்சேரியில் இருந்து சொந்த ஊரான நாரேரிகுப்பத்திற்கு, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை முருகன் ஓட்டி வந்தார்.
திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாதிரி அருகே வந்தபோது பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car crash ,brother-in-law ,
× RELATED கன்னியாகுமரி முதல் சென்னை வரை...