×

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி

ஓசூர், மே 22: வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்துள்ளனர். ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு நேற்று 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்தனர். வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி கொண்டு மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கி எடுக்ககோரி புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனத்தில் மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் என கூறி ₹1.5 லட்சம் முதல் ₹2.5 லட்சம் வரை பணம் வாங்கினர். கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, சின்னாறு, குருபரப்பள்ளி, சென்னசந்திரம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் பெற்றுள்ளனர். பணம் கொடுத்து பல மாதங்களாகியும், வேலை கிடைக்காததால், தனசேகரனை தொடர்பு கொண்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. இதனால், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, எங்களை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை வாங்கி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புகாரை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் போலீசார் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.

Tags : Millions ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...