×

தர்ணாவில் ஈடுபட்ட 4 பேர் கைது: ஆம்பூரில் நடந்தது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆம்பூர், மே 22: விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக்கூறி ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை ஆம்பூரைச் சேர்ந்த சதீஷ்குமார், பிரபு, வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் வந்தனர். அவர்கள் கைகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் பதாகைகள் வைத்திருந்தனர். பின்னர், பஸ் நிலைய வளாகம் முன் தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், விரைந்து வந்து அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரையும் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Protests ,Ambur ,
× RELATED அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா