×

ஆத்தூர் நகராட்சியில் சீரமைக்காத பாலங்களால் வாகன ஓட்டிகள் அவதி

ஆத்தூர், மே15: ஆத்தூர் நகராட்சி ராணிப்பேட்டை பகுதியில், குடிநீர் குழாயை சீரமைக்க சாக்கடை வாய்க்கால் மற்றும் பாலத்தை உடைத்தவர்கள், பணிகள் முடிந்ததும் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி ராணிப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதாக வந்த புகாரினை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர், ராணிப்பேட்டை பகுதியில் கழிவுநீர் சாக்கடையின் உட்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை ஆய்வு செய்யும் பணிக்காக, கடந்த மாதம் சாக்கடை வாய்க்கால் மற்றும் தெருக்களின் முடிவில் உள்ள சாக்கடை பாலங்களில் பெரிய துளையிட்டு குடிநீர் குழாய்களைஆய்வு செய்தனர்.

இந்த பணிகள் முடிந்த நிலையில் உடைக்கப்பட்ட சாக்கடை வாய்க்கால், மற்றும் உடைக்கப்பட்ட சிறுபாலங்களை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சாலையில் நடந்து மற்றும் டூவீலரில் செல்பவர்கள் உள்ளே விழுந்து அடிபடுகின்றனர். இந்த  உடைப்புகளை சீர் செய்யும் படி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை.

Tags : Traffic bridges ,municipality ,Adoor ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு