×

குடமுருட்டி பகுதியில் கோரை புற்கள் நிரம்பிய கோரையாறு வாய்க்கால் தூர்வாராமல் பொதுப்பணித்துறை அலட்சியம்

திருச்சி, மே 15: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் குடமுருட்டி பகுதியில் கோரை புற்களால் நிரம்பி காணப்படும் காவிரியில் இணையும் கோரையாறு வாய்க்காலை தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி கருமண்டபம் வழியாக செல்லும் கோரையாறு ஆறுகண் பாலத்திற்கு கீழே சென்ற உறையூர் பகுதியை கடந்து கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி பாலத்திற்கு முன்பாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் ஏற்கனவே கழிவுநீர் வருகிறது என சமூக ஆர்வாலர்கள், விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இதில் அதிகளவு தண்ணீர் வந்து காவிரியில் கலக்கும். இந்த வாய்க்காலில் வந்த தண்ணீர் வெள்ளப்பெருக்கு காலங்களில் நகரில் புகுந்துவிடும். இதனால் நகரமே தண்ணீர் மிதந்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. இத்தகைய முக்கியம் வாய்ந்த வாய்க்காலாக உள்ள இந்த வாய்க்கால் காவிரியில் கலக்கும் குடமுருட்டி பகுதியில் ஆகாயத்தாமரைகள், கோரை புற்கள் அதிகளவில் உள்ளது. இதனால் திடீரென மழை காரணமாக இந்த வாய்க்காலில் வெள்ளநீர் வந்தால். தண்ணீர் ஆற்றில் கலப்பதில் தடை ஏற்படும். இதனால் செயற்கையாக வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. இதுமட்டுமின்றி குப்பை கழிவுகளும் அதிகளவில் வாய்க்காலில் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் துர்நாற்றமும் ஏற்படுகிறது. எனவே இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தூர்வாரி, குப்பை கழிவுகளை அகற்றி வெள்ளநீர் தடையின்றி தூய்மையாக ஆற்றில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Kudumuruthy ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...