×

கரூர் என்எஸ்கே நகர் பகுதி-வெங்கமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை

கரூர், மே 10: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் இருந்து என்எஸ்கே நகர் வழியாக அரசு காலனி, வெங்கமேடு காவல் நிலையம், அருகம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகளும், தனியார் பள்ளியும்
உள்ளன. கடந்த பல மாதங்களாக இந்த சாலை மேடும் பள்ளமுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, சாலையில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சாலையின் வழியாக அதிகளவு கல்லூரி, பள்ளி வாகனங்களும் சென்று வருவதால் சாலையை மேம்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த சாலையின் தரத்தை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur ,Vengammedu ,NSK Nagar ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது