×

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மேம்படுத்தி பறவைகள் சரணாலயமாக மாற்றி சுற்றுலா தலம் அமைக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வேண்டுகோள்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை  மானிய கோரிக்கை விவாதத்தின்போது சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்   பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதி தமிழகத்திலேயே மிகப்பெரிய சட்டமன்ற தொகுதியாகும். இந்த பகுதி சுமார் 40 லட்சம் மக்கள் தொகையையும் 7 லட்சம் வாக்காளர்களையும் கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த பகுதியில் நீதிமன்றம் செல்ல வேண்டுமென்றால் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால் எங்கள் தொகுதியில் தனியாக  நீதிமன்றம் கொண்டுவர வேண்டும். அதேபோல், மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் ஏரி சீரமைத்தல், பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைத்து படகு குழாம் அமைத்தல், மேடவாக்கம் மேல்நிலை பள்ளியில் பெண்களுக்கு என தனி பள்ளியை உருவாக்கி தர வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு நகர்புறப் பகுதிகளுக்கு எளிதில் சென்று வருவதற்கு கலைஞர் மினிபஸ் திட்டத்தை கொண்டுவந்தார். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மேம்படுத்தி மழைநீர் சேகரிக்கப்பட்டு பறவைகள் சரணாலயமாக மாற்றி சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும்.  மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 40% முன்னுரிமை அடிப்படையில் படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். என்றார்….

The post பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மேம்படுத்தி பறவைகள் சரணாலயமாக மாற்றி சுற்றுலா தலம் அமைக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Arvind Ramesh ,MLA ,Chennai ,Sozhinganallur ,Transport Department ,Sozhinganallur Block ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...