×

ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை

தேனி, மே 8: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தின் நோன்பு காலம் நேற்று முதல் துவங்கியது.இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதம் 30 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பு நோற்று, சூரியன் மறைந்த பிறகு நோன்பை விடும் முறையை இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் கடைபிடிக்கின்றனர். இம்மாதம் முழுவதும் இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தானம், தர்மம் தாராளமாக தருவதில் மகிழ்ச்சி கொள்ளும் மாதமாக ரம்ஜான் மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

ரம்ஜான் நோன்பு நோற்கும் முதல்நாள் இரவு தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை இரவு நேரம் தொழுது அல்லாஹ்வை வேண்டி மறுநாள் காலை முதல் பகல் முழுவதும் நோன்பு நோற்கும் நிகழ்வு நேற்றுமுதல் துவங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பள்ளிவாசல்களிலும் தராவீஹ் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெரும்பான்மையான இஸ்லாமிய ஆண்கள் பள்ளிவாசல்களுக்கு வந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். நேற்று மாலை முஸ்லீம் பள்ளிவாசல்களில் நோன்பு நோற்ற நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது.



Tags : Ramzan ,
× RELATED ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்