×

ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஊட்டி: ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால், சுற்றுலா தலங்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி இதமான காலநிலை நிலவும் கூடிய சுற்றுலா தளமாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவு வருகை புரிகின்றனர். நடப்பு ஆண்டு பள்ளிகளில் தேர்வுகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கத்தை விட இம்முறை கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதற்கேற்ப தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை துவங்கி உள்ளது.

ரம்ஜான் விடுமுறையான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
மிதமான காலநிலை நிலவியதால் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினார்கள். இதனால், படகு இல்லம் களைகட்டி காணப்பட்டது. இதேபோல், நகருக்கு வெளியே உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

The post ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ramzan ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்