×

ஆத்தூர் அருகே புது ஏரியில் தடுப்பு அமைத்து பன்றி வளர்ப்பு

ஆத்தூர், மே 3: ஆத்தூர் அருகே, புது ஏரியில் தடுப்புகள் அமைத்து பன்றி வளர்ப்பில் அங்குள்ள சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் ஒன்றியம் தென்னங்குடிபாளையம் கிராமத்தில், பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவின் பராமரிப்பில் 300 ஏக்கர் பரப்பளவில் புது ஏரி உள்ளது. இந்த ஏரியின் உட்பகுதியில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் தடுப்புகளை அமைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்போது பாதிப்பு ஏற்படும். தற்போது ஏரியில் ஆக்கிரமிப்பு இல்லாத நிலையில் இவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை போல் வேறு ஆட்களின் ஆக்கிரமிப்பு உருவாகும் அபாயமுள்ளது.

மேலும், ஏரியில் பன்றிகள் வளர்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பன்றிகளுக்கு தீனியாக கழிவுகளை கொட்டப்படுவதால் ஏரியின் தூய்மை கெட்டுவிடும். எனவே இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும், தடுப்புகள் அமைத்து பன்றி வளர்ப்பை தடுக்கவேண்டும் என புது ஏரியின் பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உள்ளனர்.

Tags : lake ,Adoor ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு