×

10ம் வகுப்பு தேர்வில் ஜேசீஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ஈரோடு, மே 3: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 29வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 160 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 20 பேரும், 450க்கு மேல் 50 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 400 மதிப்பெண்ணுக்கு மேல் 119 மாணவர்கள் பெற்றுள்ளனர். 491 மதிப்பெண்கள் எடுத்து மாணவி சுகிதா முதலிடத்தையும், சப்த ரிஷிவேல், ரோகித் ஆகிய இரு மாணவர்கள் 490 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், 487 மதிப்பெண் பெற்று  அஜிதா, வேதவர்ஷினி, ஜெய்ஸ்ரீராம் ஆகியோர் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
 
அறிவியல் பாடத்தில் சப்த ரிஷிவேல் முதலிடத்தையும், சமூக அறிவியல் பாடத்தில் சுகிதா, சப்த ரிஷிவேல், சுவேதா, பவ்யா, ஜெயந்தினி, ஜெய் ஸ்ரீராம் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள், முதல்வர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்களை  பள்ளி தலைவர் என்.முத்துசாமி, தாளாளர் சி.பி.சந்திரசேகரன், பொருளாளர் வி.என்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் கே.ஈஸ்வரமூர்த்தி, துணைச்செயலாளர் என்.கோகுல சந்தானகிருஷ்ணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Jesse ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி