×

கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி

ஏற்காடு: ஏற்காடு நாகலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மனைவி ஜெஸி(45). நேற்று அருகேயுள்ள திறந்தவெளி கிணற்றில், துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றில் நீர் இறைத்த போது, ஜெஸி தவறி கிணற்றில் விழுந்தார். அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற, அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்வான் என்ற சிறுவன், ஜெஸி கிணற்றில் விழுந்து தத்தளிப்பதை பார்த்து, அவரது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பரிசோதனை செய்தபோது, ஜெஸி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Jose ,Jessie ,Anna Nagar, Yercaud ,Jesse ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து