×

தனியார் பஸ் மோதி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பலி

 

ஈரோடு, ஜூன் 5: ஈரோட்டில் தனியார் பஸ் மோதி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு திண்டல் வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம் (75). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர், நேற்று முன்தினம் மாலை ஈரோடு பழையபாளையத்தில் மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி கொண்டு அவரது ஸ்கூட்டரில் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சுந்தரம் ஓட்டி வந்த ஸ்கூட்டரில் மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுந்தரத்தின் தலையின் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது.  சுந்தரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தெற்கு போலீசார், இறந்து கிடந்த சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளைய சாணார்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் பஸ் மோதி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Sundaram ,Thindal Veerapampalayam ,Old Palayam ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது