×

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 3: ஈரோடு அடுத்த லக்காபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலின்பேரில், போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, லக்காபுரம் சாணார்மேடு பஸ் ஸ்டாப் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு புஞ்சை லக்காபுரத்தை சேர்ந்த மாதேஸ் (43), கொல்லம்பாளையம் ராஜீவ் நகரை சேர்ந்த ராஜசேகர் (39) ஆகிய 2 பேரையும் மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு ஸ்மார்ட் போன், கேரளா லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட நோட்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மொய்தீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Lakkapuram ,Erode Punjai ,Lakkapuram Chanarmedu ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது