×

செந்துறை அருகே அரசு பள்ளி அருகே நீரோடையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் பொதுமக்கள், மாணவர்கள் அவதி

செந்துறை, ஏப். 30: செந்துறை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீரோடையில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செந்துறை அருகே அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி பள்ளி உள்ளது.  இந்த பள்ளி ஓரமாக நீரோடை செல்கிறது. இதில் செந்துறையில் உள்ள கழிவுநீர் கலந்து செல்கிறது. மேலும் செந்துறை பகுதியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓடையில் வந்து கொட்டப்படுகின்றன. மேலும் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளில் கழிவுகளை  இந்த ஓடையில் தான் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்கள், அங்கு தங்கியுள்ள விடுதி மாணவர்கள் மற்றும் பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.

செந்துறை பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை தரம் பிரித்து கொட்ட தனி இடம் இருந்தும், உடையார்பாளையம் சாலையில் உள்ள பாலம் அருகில், பள்ளியின் அருகில், ரயில் நிலைய சாலையில் உள்ள  ஓடையில் என நீர் வழிப்பாதையில் பல இடங்களில் குப்பைகளை கொட்டுவதால் கழிவுகள் ஓடையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளை கோழி, பன்றி போன்ற விலங்குகள் கிளருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவாக இங்கு குப்பை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு நக்கம்பாடி, வஞ்சினபுரம், குழுமூர் உள்ளிட்ட பாசன ஏரிகளில் கலந்து வயல்வெளிகளுக்கு  சென்று பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி தொலைவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் தரம் பிரித்து குப்பைகளை கொட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government school ,masses ,Jenthura ,
× RELATED அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி