×

தேன்கனிக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க டிஎஸ்பி அறிவுரை

தேன்கனிக்கோட்டை, ஏப்.26: தேன்கனிக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, நேற்று டிரைவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை வழங்கினார். தேன்கனிக்கோட்டை நகரில் பழைய பஸ்நிலையம், எம்.ஜி.ரோடு, ஓசூர் ரோடு, நேதாஜி ரோடு, அஞ்செட்டி ரோடு, மஜீத்தெரு, நேரு தெரு ஆகிய பகுதிகளில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளாலும், நகரில் சாலையை ஆக்கிரமித்து டூவீலர், கார்கள் மற்றும் வேன், லாரி என சரக்கு வாகனங்கள் நிறுத்துவதால், காலை, மாலை பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று, நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில்  டிஎஸ்பி சங்கீதா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் டிரைவர்கள் மற்றும்  போலீசார் கலந்துகொண்டனர். எஸ்ஐ கலைவாணி வரவேற்றார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி சங்கீதா பேசுகையில், ‘தேன்கனிக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது