×

ஓசூர் அரசு ஐடிஐயில் தையல், நிட்டிங் பயிற்சி

ஓசூர்,  ஏப்.25: ஓசூர் அரசு ஐடிஐயில் குறுகிய காலத் தையல்  மற்றும் நிட்டிங் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  ஓசூர் அரசு ஐடிஐ துணை இயக்குநர் சுகுமார் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: ஓசூர் அரசு ஐடிஐயில் குறுகிய கால தையல் மற்றும்  நிட்டிங் பயிற்சி, அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி மொத்தம் 40 ேபருக்கு 3 மாத காலத்திற்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ள  18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட பள்ளிப்படிப்பு முடித்தவர்கள், படிப்பை  பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர், இப்பயிற்சியில்  சேர்ந்து பயன்பெறலாம்.

பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில்  உடனடி வேலைவாய்ப்பு உறுதி, பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ்  வழங்கப்படும். இதில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சியாகும்.  விண்ணப்ப கட்டணம் ₹50 மற்றும் சேர்க்கை கட்டணம் ₹100 மட்டுமே. தகுதி  மற்றும் விருப்பமுள்ளவர்கள், தங்களின் அசல் கல்வி சான்றிதழ்களுடன் மற்றும்  நகலுடன் வருகிற மே 3ம் தேதி வரை, காலை 10 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம்  அருகிலுள்ள துணை இயக்குநர், அரசினர் ஐடிஐயை அணுகலாம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : ITI ,Hosur ,
× RELATED விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள்...