×

ராஜாக்கமங்கலம் அருகே பைக் விபத்தில் டெய்லர் பலி

ஈத்தாெமாழி, ஏப். 18: ராஜாக்கமங்கலம் அருகே ைபக் விபத்தில் காயமடைந்த டெய்லர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (52). டெய்லர். இவர் ராஜாக்கமங்கலம் ஜங்ஷனில் டெய்லர் கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் 15ம் தேதி சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Taylor ,bike accident ,Rajagamangalam ,
× RELATED டெய்லர் தூக்கிட்டு தற்கொலை