×

டெய்லர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், ஏப். 4: திருப்பூர், 15.வேலம்பாளையம் அடுத்த புதுக்காலனியை சேர்ந்தவர் சேக் ஜாகிர் உசேன் (29). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வழக்கம்போல் பேசிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். காலை நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது ஷேக் ஜாகிர் உசேன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து 15.வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post டெய்லர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Taylor ,Tirupur ,Chek Zakir Hussain ,Pudukalani ,Velampalayam ,Banyan Company ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...